தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 2 கப்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
பட்டை – 2 பீஸ்
கிராம்பு – 6
அன்னாசி பூ – 2
பிரியாணி இலை – 2
கடல்பாசி – 1
தண்ணீர் – 4 கப்
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் பாசுமதி அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒருமணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
அகலமான குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், கடல்பாசி மற்றும் பிரியாணி இலை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கிக்கொள்ளவும்.
முந்திரி மிதமான அளவிற்கு வதங்கியதும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
ஓரளவிற்கு வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
இதன் பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்த பாசுமதி அரிசி 2 மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு நெய்யுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின்னர் 2 கப் அரிசிக்கு 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ள கலந்துகொள்ளுங்கள்.
உப்பு காரம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்து குக்கரை மூடி மிதமான சூட்டில் இரண்டு விசில் வரும் வரை விடவும்.
இரண்டு விசில் வந்ததும் பிரஷர் தானாக அடங்கியவுடன் குக்கரின் மூடியை திறந்து சாதம் உடைந்து போகாமல் ஒருமுறை கிளறிவிடவும்.
அவ்வளவுதான் சுவையான பாய் வீட்டு நெய் சோறு ரெடி…