தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் – 1/2 கிலோ
பூண்டு – 15 பல்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காய தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் நெல்லிக்காய்களை போட்டு மிதிகமான தீயில் வதக்கவும்.
நெல்லிக்காய் நன்கு வதங்கியவுடன் அவற்றை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
கடுகு வெடித்ததும் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காய பொடி சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
தற்போது வதக்கி வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து நன்றாக கலந்து 8 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
நெல்லிக்காய் நன்றாக மசாலாக்களுடன் சேர்ந்து வதங்கியவுடன் அடுப்பை அணைத்து ஊறுகாயை ஆறவிடவும்.
நெல்லிக்காய் ஊறுகாய் ஆறியவுடன் ஒரு ஜாரில் போட்டு வைத்துத்க்கொள்ளுங்கள்.