ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என பல்வேறு சுவையான பழங்கள் இருந்தாலும் தனித்து இனிப்பு சுவையுடன் பலருக்கும் பிடித்தமான பழமாக இருக்கிறது சப்போட்டா. கிரீமி அமைப்பு மாற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதோடு உடலை விட்டு குறைய மறுக்கும் கூடுதல் எடையை குறைக்க உங்கள் எடை இழப்பு பயணத்தில் ஒரு சக்திவாய்ந்த பழமாகவும் இருக்கும். வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களால் நிரம்பி இருக்கும் சப்போட்டா பழம், நிச்சயம் உங்கள் வெயிட் லாஸ் டயட்டில் சேர்ப்பதற்கான சரியான பழமாக இருக்கும்.
ஃபைபர் சத்து அதிகம்:
சப்போட்டா பழங்களில் டயட்ரி ஃபைபர் நிரம்பியுள்ளது. எனவே இதனை நீங்கள் எடுத்து கொள்ளும் போது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்து முழுமையாக இருப்பதை போல உணர உதவும். எனவே உங்கள் டயட்டில் சப்போட்டா பழங்களை சேர்ப்பதன் மூலம் பசியை கட்டுப்படுத்துவதோடு அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்த்து கொள்ளலாம். இதன் மூலம் கலோரி நுகர்வு குறைவதோடு, எடையும் குறைகிறது.
செரிமான அமைப்புக்கு சிறந்தது:
சப்போட்டா பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் அதிகம் உள்ளன. இதனால் டயட்டில் சப்போட்டா பழங்களை சேர்த்து கொள்வது உங்களது செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்ல உதவுகிறது. அழற்சியை எதிர்ப்பது போராடி செரிமானத்தை எளிதாக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் சப்போட்டாவில் அடங்கி உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. இதன் மூலம் நம்முடைய ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது:
சப்போட்டா பழங்களில் நேச்சுரல் சுகர்ஸ் உள்ளன, இவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் விரைவான ஆற்றலை வழங்குகிறது. தவிர இந்த பழங்களில் உள்ள முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு, நம் உடல் கலோரிகளை மிகவும் திறமையாக எரிக்கவும் அனுமதிக்கிறது.
கலோரிகள் குறைவு:
சப்போட்டா பழங்களின் சுவை இனிப்பு என்றாலும் கூட, மற்ற பழங்களுடன் ஒப்பிடும் போது இதில் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளன. எனவே இனிப்பு சுவை கொண்ட பழம் என்றாலும் கலோரி நுகர்வு பற்றிய கவலை இல்லாமல் இதனை சுவைக்க முடியும். மேலும் தங்களது எடையை குறைக்க விரும்புவோருக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆப்ஷனாக இந்த பழம் இருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது:
சப்போட்டா பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறையவே இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர கொழுப்பு எரியும் (fat burning) செயல்முறைகளையும் மேம்படுத்துகின்றன.