இன்றைய ராசி பலன் – மார்ச் 21, 2024

by Editor News

மேஷம்:

தொழிலில் ஒரு சில வேலைகள் காரணமாக மதியம் முதல் மாலை வரை சிக்கல்களை சமாளிப்பீர்கள். தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் எதிர்காலத்தில் பயனடைவீர்கள்.

ரிஷபம்:

இன்று தொண்டு காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். இதனால் உங்கள் புகழ் எல்லா இடத்திலும் பரவும். தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மிதுனம்:

இன்று திடீரென்று பெரிய அளவிலான தொகை கைக்கு கிடைக்கும். இன்று வாழ்க்கை துணையுடன் சேர்ந்து ஷாப்பிங் செல்வீர்கள். எனினும் வரவு மற்றும் செலவுக்கு இடையே சமநிலையை பராமரிப்பது அவசியம். இன்று நீங்கள் செய்யும் வேலைகளுக்கான பலன்களை பெறுவீர்கள்.

கடகம்

தொழிலில் நீங்கள் எடுக்கக்கூடிய ஒரு சில புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியையும், புகழையும் தேடி தரும். மாலை நேரத்தில் வீட்டிற்கு விருந்தாளிகளின் வருகையால் செலவு அதிகரிக்கும். தொழிலில் நிலவி வரும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.

சிம்மம்

உங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று பணத்தை செலவழிப்பீர்கள். தொழிலில் நிலவி வரும் பிரச்சனைகளை உடன் பிறந்த சகோதரனுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக பலனடைவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் பகுதி நேர வேலை செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கான நேரம் இன்று கிடைக்கும்.

கன்னி:

தொழிலில் ஏற்பட்ட பெரிய லாபத்தின் காரணமாக உங்களுடைய பொருளாதார நிலை வலுவாகும். இன்று வரவுக்கு அதிகமாக செலவு செய்தால் எதிர்காலத்தில் பண பிரச்சனை ஏற்படலாம். எனவே புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்கவும்.

துலாம்:

இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஏற்ற வேலை உங்களுக்கு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை சுற்றி உள்ள சூழல் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் எண்ணம் இருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

விருச்சிகம்:

இன்று வேலை மற்றும் தொழிலாகிய இரண்டிலுமே எதிரிகளின் பக்கம் வலுவாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலில் ஏற்படக்கூடிய லாபத்தை விட செலவுகள் அதிகமாக இருப்பதால் வருத்தம் கொள்வீர்கள்.

தனுசு:

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வதால் ஒரு சில செலவுகள் ஏற்படும். தொழிலில் பிறர் ஆலோசனை உங்களுக்கு தேவைப்படலாம்.

மகரம்:

இன்று உங்கள் சகோதரர்கள் மற்றும் தொழிலில் உடன் பணி புரிபவர்கள் இடையே மனக்கசப்பு ஏற்படலாம் என்பதால் இன்றைய நாள் முழுவதும் அசௌகரியத்துடன் காணப்படும். இன்று கடை அல்லது வீடு வாங்குவதற்கான எண்ணம் இருந்தால் உங்கள் வாழ்க்கை துணையின் ஆலோசனையை கேட்பது நல்லது. உங்கள் எதிரிகள் உங்களை தேவையில்லாமல் சீண்டுவதற்கும் முயற்சி செய்யலாம்.

கும்பம்:

இன்று தொழிலில் தொடர்ச்சியாக லாபம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனுடன் சேர்ந்து ஒரு சில தொழில் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு பலனளிக்கும் விதமாக அமையும். வெளிநாடுகளில் தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்:

பணிக்கு செல்பவர்களின் வேலை சுமை அதிகரிக்கலாம். ஆனால் உங்களுடைய புத்திசாலித்தனம் மூலமாக மாலை நேரத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். சொத்து தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை சட்டரீதியாக சமாளிப்பீர்கள்.

Related Posts

Leave a Comment