நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், 2024 சிறுபோகத்திற்கான நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் அல்லது அரசாங்க அதிபர்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குறைந்த வருமாம் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை 2 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 42 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி முன்வைத்த குறித்த இரண்டு யோசனைகளுக்கே அமைச்சரவையினால் குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.