மாதுளம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை சப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அவை உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது. மாதுளை தழும்புகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது.
மாதுளையை சரியான முறையில் பயன்படுத்தினால் பொலிவான முக அழகைப் பெறலாம். எனவே, வீட்டிலேயே மாதுளையை வைத்து ஃபேஸ் பேக்எளிதாக எப்படி செய்வது என்று இங்கு தெரிந்துகொள்வோம்.
மாதுளை – தயிர்:
இந்த ஃபேஸ் பேக் செய்ய, முதலில் ஒரு கிண்ணம் தயிர் எடுக்க வேண்டும். அதனுடன் மாதுளை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வைக்கவும். பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இந்த மாஸ்க் உங்கள் முகத்தில் உள்ள அனைத்து கறைகளையும் நீக்குகிறது.
மாதுளை – தேன்:
மாதுளை மற்றும் தேன் ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். இதற்கு, மாதுளம் பழச்சாற்றில் தேன் சேர்த்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை ஸ்க்ரப்:
உங்களுக்கு தெரியுமா..மாதுளையை ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு ஓட்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மாதுளை சாறு சேர்க்கவும். இந்த கலவையுடன் நன்கு கலந்து முகத்தில் தடவவும். பின்னர் கையால் மெதுவாக தேய்க்கவும். இப்படி செய்வதினால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன.
மாதுளம்பழம் – கற்றாழை:
மாதுளம்பழம் மற்றும் கற்றாழையின் கலவையானது டான் பிரச்சனையை தீர்க்கும். வெயிலில் இருந்து திரும்பி வந்த பிறகு, கற்றாழை மற்றும் மாதுளை ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவவும். இதனால் சூரியனால் ஏற்படும் உங்கள் முகத்தின் கருமை நீக்கும்.