மேஷம்:
இன்றைய நாள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் மிகவும் சந்தோஷமாக நேரம் செலவிடுவீர்கள். மனதில் தோன்றுவதை தெளிவாக பேச கற்று கொள்வது நல்லது. அலுவலகத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
ரிஷபம்:
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிஸியாக இருப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சுய முன்னேற்றத்தில் அக்கறை தேவை. தியானம் செய்ய பழக வேண்டும்.
மிதுனம்:
மிகவும் ரொமான்டிக்கான நாளாக இருக்கும். கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மன முதிர்ச்சி ஏற்படும். உடல் இயக்கத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கடகம்:
திருமண உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். நீண்டகால திட்டங்களை செயல்படுத்தலாம். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். சிட்டு குருவியை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
சிம்மம்:
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. உடல்நலனில் அக்கறை தேவை. பயணம் செய்ய ஏற்ற நாள். நீங்கள் இன்று புதிய இடங்களுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.
கன்னி:
கடந்தகால பிரச்சனைகள் விரைவில் சரியாகும். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவது நல்லது. வேலையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். முயற்சியை கைவிட வேண்டாம். மற்றவர்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்:
மற்றவர்களுடன் உள்ள உறவு மேம்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியை பெறுவது நல்லது. மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது நல்லது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுய முன்னேற்றத்தில் அக்கறை தேவை. பயணம் செய்ய ஏற்ற நாள்.
தனுசு:
உங்களது அன்புக்குரியவர்களுடனான உணர்ச்சிப் பிணைப்பை ஆழப்படுத்த நீங்கள் இன்று வெளிப்படையாக இருக்க வேண்டும். புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இன்று உங்களுக்குள் எழலாம். முக்கிய விஷயங்களில் உங்கள் உள்ளுணர்வை நீங்கள் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
மகரம்:
திருமண உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். மற்றவர்களை மதித்து நடப்பது நல்லது. அதிகமாக உழைக்க ஆர்வம் காட்டுவீர்கள். அதிக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெரியோர்களின் ஆசியை பெறுவது நல்லது. நேர்மையாக இருக்க வேண்டும்.
கும்பம்:
மற்றவர்களின் மீது நம்பிக்கை வைத்து முக்கிய வேலைகளில் ஈடுபடுவீர்கள்.. புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடுவீர்கள். பார்ட்னருடன் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். பயணம் செய்ய ஏற்ற நாள்.
மீனம்:
காதல் மற்றும் திருமண வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்படலாம். நல்லவிதமாக மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல்நலனில் அதிக அக்கறை தேவை. உங்கள் நெருங்கிய நண்பருடன் மனம் விட்டு பேச இன்று நல்ல நாள். உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.