உலகிலேயே மிகவும் படித்தவர்களை கொண்ட நாடு..

by Editor News

நம்மில் சிலர் இப்போது வரைக்கும் உலகில் படித்தவர்களை கொண்ட நாடு எது என்ற கேள்விக்கு அமெரிக்கா இந்தியா என பதிலளிப்பார்கள் ஆனால் அது தவறான பதிலாகும்.

இந்த பதிவில் உலகில் மிகவும் படித்த தரப்பினரை கொண்ட நாடு எது என்பதை தான் பார்க்க போகிறோம்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் அதிகம் படித்தவர்களின் நாடுகளின் பட்டியலில் உள்ளபடி பார்த்தால் முதலிடத்தில் இருப்பது கனடா தான்.

இங்கு 59.96% சதவீதமானோர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் இருப்பது ஜப்பான் ஆகும். இது 52.68% சதவீதமானோர் கல்வி அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாடு லக்சம்பர்க் என்ற நாடும் தென் கொரியா 4 வது இடத்தில் உள்ளது. மற்றும் இஸ்ரேல் 5வது இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்க ஆறாவது இடத்தையும் பிரிட்டன் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த நிலையில் உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை.ஏனென்றால் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.

Related Posts

Leave a Comment