கரப்பான் பூச்சிகள் அல்லது பல்லிகளை வீட்டில் இருந்து வெளியேற்ற சில வைத்தியங்கள்..

by Editor News

முட்டை ஓடு:

வீட்டிலிருந்து பல்லிகளை விரட்ட முட்டை ஓடுகள் சிறந்த தீர்வாகும். ஜன்னல்களில் முட்டை ஓடுகளை வைக்கவும். இதனால் பல்லிகள் வீட்டிற்கு வரமாட்டார். ஆனால் ஒவ்வொரு வாரமும் முட்டை ஓட்டை மாற்றவும் இல்லையெனில் அது அழுகலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்கள்:

நீங்கள் வெங்காயம் மற்றும் பூண்டு தோல்களை சேமித்து அவற்றை ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வைக்கவும். அவற்றில் இருந்து வரும் வாசனை பூச்சிகள் பல்லிகளை விரட்டும். அறையின் நடுவில் உள்ள சிறிய டேபிள் ஃபேனுக்கு அருகிலும் இதை வைக்கலாம்.

கிராம்பு:

சமையலறையில் கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்க கிராம்புகளை பயன்படுத்த வேண்டும். பூச்சிகள் அதன் வாசனையால் எளிதில் ஓடிவிடும்.

பெப்பர் ஸ்ப்ரே:

மிளகைப் பயன்படுத்தி வீட்டிலேயே பெப்பர் ஸ்ப்ரே செய்யலாம். மிளகு தூள் செய்து அதனுடன் தண்ணீர் சேர்க்கவும். அவ்வளவுதான் பெப்பர் ஸ்ப்ரே ரெடி. பெப்பர் ஸ்ப்ரேவை பூச்சிகள், பல்லிகள் உடலில் தெளிக்கும் போது உடலில் எரிச்சலூட்டுகிறது, இதனால் அவை வீட்டிற்குள் வருவதை தவிர்க்கும்.

Related Posts

Leave a Comment