அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா தற்போது ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருக்கிறது.
உக்ரைன் போரால் இராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெபெற்று வருகிறது.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின், சுமார் 20 வருடமாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இதனிடையே உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புடினுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புடினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
இந்த தேர்தல் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், புடின் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றார்.
அதன்படி, இந்த ஜனாதிபதி தேர்தலில் புடின் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
புடினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 06 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.