ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்கள்..

by Editor News

நோன்பு கடைப்பிடிப்பதை தவிர இந்த நாட்கள் முழுவதிலும் இஸ்லாமியர்கள் பல்வேறு விதமான தீவிரமான வழிமுறைகளையும், நபி முகமது அவர்களின் போதனைகளை பின்பற்றுவார்கள். எனவே ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை :

ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 5 முறை தொழுக வேண்டும். மேலும் கூடுதல் நன்மைகளுக்கு கூடுதல் முறை தொழுகலாம்.

உங்களால் முடிந்தவரை ரம்ஜான் மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நன்கொடைகளை வழங்குங்கள். இதனை வருடம் முழுவதும் கூட செய்யலாம்.

உங்களது நாளை சூரிய உதயத்திற்கு முன்பு உணவோடு ஆரம்பித்து, பின்பு விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு விரதத்தை துறக்கவும்.

குர்ஆனை வாசித்து, அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மனப்பாடம் செய்யவும். திருக்குர்ஆன் வாசகங்களின் அர்த்தம் அறிந்து வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்கவும்.

நோன்பு கடைப்பிடிக்கும் பொழுது பிறரிடம் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை பொறுமையை கையாளவும்.

தொழுகையின் போது தங்களது குடும்பத்தாரின் நலனுக்காக அல்லாஹ்விடம் தொழுக வேண்டும்.

செய்யக்கூடாதவை :

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் பொழுது இஸ்லாமியர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக எந்த ஒரு உணவையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் பருகவோ கூடாது.

மது அருந்துவது அல்லது புகைப்பிடிப்பது அல்லது வேண்டுமென்றே வாந்தி எடுப்பது போன்றவை நோன்பின் பலனை இழக்கச் செய்கிறது.

ரம்ஜான் சுய மேம்பாட்டை வலியுறுத்துவதால் பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, சண்டையிடுவது போன்றவற்றை தவிர்த்து மன அமைதியை பேணவும்.

ரம்ஜான் நோன்பு இருந்தால் அந்த சமயத்தில் இசை கேட்பதற்கு அனுமதி கிடையாது.

முடிந்த அளவு அல்லாவை தொழுது, அவரை நினைத்துக் கொண்டே இருக்கவும்.

நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவும்.

பிறரை வெறுத்தல் அல்லது கசப்பான விஷயங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது நோன்பிற்கான பலனை உங்களுக்கு தராது.

கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் அல்லது மாதவிடாய் சமயத்தில் பெண்கள் நோன்பு இருப்பதை தவிர்க்கவும்.

ரம்ஜான் மாதம் முழுவதும் அல்லாவை தொழுவதை தவிர்க்க வேண்டாம். நோன்பில் எந்த ஒரு தாமதத்தையும் ஏற்படுத்தாமல் சரியான நேரத்தில் கடைபிடிக்கவும்.

நோன்பின் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

Related Posts

Leave a Comment