ஏ.ஆர்.ரஹ்மான் பாடலில் பாலஸ்தீன் போர் காட்சிகள்!? – வைரலாகும் Hope பாடல்!

by Editor News

விரைவில் வெளியாகவுள்ள “Goat Life” படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த பாடல் நேற்று வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மலையாள எழுத்தாளர் ‘பென்யாமின்’ எழுதி பல விருதுகளை வென்ற புகழ்பெற்ற நாவல் ஆடுஜீவிதம். இந்த நாவலை The Goat Life என்ற பெயரில் படமாக்கியுள்ளார்கள். ப்ரித்விராஜ், அமலாப்பால் நடித்துள்ள இந்த படத்தை ப்ளெஸ்ஸி எழுதி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது அந்த படத்திற்கான ப்ரொமோஷனாக Hope என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மானே இந்த பாடலின் காட்சிகளில் இடம்பெறுகிறார். பாடலின் காட்சிகளில் பாலஸ்தீன் யுத்தம், சிறுமி ஒருத்தி துப்பாக்கிகள் முன் அழும்படி நிற்கும் காட்சிகள் யுத்தத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

”ஒவ்வொரு மூச்சும் யுத்தமாக இருக்கும் இடத்தில், நம்பிக்கைதான் சிறந்த ஆயுதம்” என்ற வசனத்தோடு தொடங்கும் இந்த பாடல் பாலஸ்தீன் யுத்தத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Posts

Leave a Comment