சமையல் டிப்ஸ்…

by Editor News

தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.

கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.

ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.

புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.

ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.

கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

Related Posts

Leave a Comment