நீட் தேர்வு – மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

by Editor News

நீட் தேர்வு பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம்; மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 16ஆம் தேதி வரை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Related Posts

Leave a Comment