வயதாவதை எதிர்க்கும் தன்மை அவகேடோ ஆயிலுக்கு உண்டா?
வயதாகும் போது முகத்தில் இயற்கையான எண்ணெய் மற்றும் கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதனால் முகத்தில் நெற்றியில் கோடுகள் முதலில் தென்படுகின்றன. முகச்சுருக்கங்களுக்கு நீங்கள் அவகேடோ பயன்படுத்தலாம். மேற்பூச்சாக பயன்படுத்தும் போது தோல் வறட்சியை எதிர்த்து வயதான அறிகுறிகளை குறைக்கும். இதை தோலில் பயன்படுத்தும் போது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க கூடும். விலங்குகள் மீது மேற்கொண்ட ஆய்வில் இது கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் காயங்களின் போது அழற்சி செல்களின் அளவை குறைக்கிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் உணவில் சேர்த்துகொள்வது, சருமம் குறைவாக வறண்டு அதன் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும். இது சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க செய்யும்.
அவகேடோ ஆயில் சன்பர்ன் பிரச்சனை தடுக்க செய்யுமா?
2011 -ல் வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின்படி அவகேடோ ஆயில் வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், வைட்டமின் டி, புரதம், லெசித்தின் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது சூரியனிடமிருந்து வரும் தாக்கத்தை ஆற்றவும் வெயிலின் பாதகமான விளைவுகளை குறைக்கவும் உதவும்.
ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்தை குறைப்பது தோல் ஆரோக்கியம் மற்றும் நமது உடலின் உள் ஆரோக்கியத்துக்கு தேவையானது. இது வயது புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் தோல் புற்றூநோய் போன்றவற்றுக்கு பங்களிப்பதால் இதை குறைப்பது நல்லது. அவகேடோ எண்ணெயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உள்ளடக்கத்துடன் இருப்பதால் ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்தை தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.
தடிப்புத்தோல் அழற்சி அவகேடோ எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?
தடிப்புத் தோல் அழற்சி என்பது நாள்பட்ட தன்னுடல் தாக்க நோயாகும். இது சருமத்தின் வீக்கம் மற்றும் செதில்களை உண்டு செய்கிறது. 2001 ஆம் ஆண்டு டெர்மட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் அவகேடோ ஆயில் வைட்டமின் பி12 க்ரீம் 12 வாரம் எடுத்துகொண்ட நிலையில் தடிப்புத்தோல் அழற்சி நோயாளிகளுக்கு நிலையான நன்மை அளிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் பி12 அவகேடோ எண்ணெய் பயன்பாடு தடிப்புத்தோல் அழற்சியின் நீண்ட் கால மேற்பூச்சு சிகிச்சையாக கணிசமான ஆற்றலை கொண்டுள்ளது என்று ஆய்வு கூறியுள்ளது.
தோல் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
அவகேடோ ஆயில் நகம் மற்றும் க்யூட்டிகல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உலர்ந்த மற்றூம் உடையக்கூடிய நகங்கள் இந்த கேரியர் எண்ணெயில் ஊட்டமளிக்கும் கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களை மேம்படுத்தும்.
முகப்பரு பாதிப்புக்கு அவகேடோ ஆயில் உதவுமா?
முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெயை அகற்ற வேண்டும். ஏனெனில் இது முகப்பருவை மோசமாக்கலாம். அவகேடோ ஆயில் பயன்படுத்தும் போது அது சருமத்தை ஈரப்பதமாக்கலாம். சருமத்தின் அதிகப்படியான உற்பத்தியை குறைத்து முகப்பருவின் மூல காரணமான எண்ணெய்பசையை குறைக்கிறது.
அவகேடோ எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?
அவகேடோ எண்ணெயை சில துளி எடுத்து சருமத்தில் நேரடியாக பயன்படுத்தலாம்.
மென்மையாக மசாஜ் செய்யலாம்.
உடல் லோஷன்களில் கலந்து சேர்க்கலாம்.
கைகளில் மாய்சுரைசராக பயன்படுத்தலாம்.
இது வயதான எதிர்ப்பு தீர்வாக செயல்படும்.
வெகு அரிதாக இது ஒவ்வாமை எதிர்வினை உண்டு செய்யலாம் என்பதால் பேட்ச் பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.