டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் டெல்லி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் நேற்று தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு கும்பலை கலைக்க குறித்த பொலிஸ் அதிகாரி இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பொலிஸ்; நிலையத்தின் பொறுப்பாளர் – ஒரு மசூதிக்கு அருகே பரபரப்பான சாலையின் ஓரத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிலரை கலைக்க முயன்றுள்ளார்.
இச் சம்பவம் குறித்து பதிலளித்த டெல்லி வடக்கு பொலிஸ் துணை ஆணையாளர்,குறித்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், அவருக்கு எதிராக தேவையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது – என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.