சைனுசிட்டிஸ் தொற்றின் ஒரு சில அறிகுறிகள் :
முகத்தில் வலி அல்லது அழுத்தம், குறிப்பாக கன்னங்கள், நெற்றி மற்றும் கண்களில் வீக்கம் ஏற்படுவது
மூக்கடைப்பு காரணமாக மூக்கு வழியாக மூச்சு விடுவதில் சிரமம் மூக்கிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியாக சளி வெளியேறுதல்
தொண்டை கரகரப்பு அல்லது இருமல் தலைவலி குறிப்பாக நெற்றி அல்லது கண்களுக்குப் பின் வலி ஏற்படுதல்
வாசனை மற்றும் சுவை உணர்வு குறைவாக காணப்படுதல்
சோர்வு, காய்ச்சல் அல்லது லேசான உடல் வலி
சைனுசிட்டிஸ் பிரச்சனை நமக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதனை சமாளிப்பதற்கு ஒரு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. ஆனால் நாள்பட்ட சைனுசிட்டிஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும்.
சைனுசிட்டிஸ் பிரச்சனைக்கான ஒரு சில வீட்டு வைத்தியங்கள்:-
மூக்கு மருந்து : மூக்கில் உள்ள சளி, ஒவ்வாமை பொருட்கள் மற்றும் எரிச்சலூட்டும் பொருட்களை வெளியேற்றுவதற்கு நீங்கள் ஒரு சலைன் சொல்யூஷனை மூக்கில் பயன்படுத்தலாம். நேசல் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தும் பொழுது அந்த கருவிகள் நன்றாக கிருமி நீக்கம் செய்யப்பட்டதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். தொற்றுகளை தவிர்ப்பதற்கு நீங்கள் டிஸ்டில்டு அல்லது கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நீராவி இழுத்தல் : சுவாச பாதைகளை ஈரப்பதமாக்கி அங்குள்ள சளியை தளர்த்தி மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதற்கு முன்பு உங்கள் முகத்தை ஒரு போர்வையோடு போர்த்தி சிறிது நேரம் அந்த ஆவியை உள்ளே எடுக்கவும். ஒரு சில நிமிடங்களுக்கு ஆழ்ந்த சுவாசங்களை எடுங்கள்.
ஒத்தடம் : வெதுவெதுப்பான ஒத்தடம் சைனஸ் பகுதியில் வெதுவெதுப்பான ஒத்தடம் வைப்பது வலி மற்றும் அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவும். ஒரு காட்டன் டவல் அல்லது துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் முக்கி எடுத்து அதனை உங்கள் முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து எடுக்கவும். இதனை ஒரு நாளைக்கு பலமுறை செய்யுங்கள்.
நீரேற்றம் : தண்ணீர், ஹெர்பல் டீ மற்றும் சூப் போன்றவற்றை நாள் முழுவதும் பருகுவதன் மூலமாக உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சுவாச பாதைகளில் ஈரப்பதம் நீடிப்பதை உறுதி செய்யும்.
ஹியூமிடிஃபையர் : படுக்கையறை அல்லது நீங்கள் பெரும்பாலான நேரத்தை செலவழிக்க கூடிய உங்கள் வீட்டின் பகுதியில் ஹியூமிடிஃபையர் பயன்படுத்துவது காற்றில் ஈரப்பதத்தை சேர்த்து வறட்சியை தவிர்க்க உதவும். இதனால் சுவாச பாதையில் எரிச்சல் ஏற்படாது. ஆனால் வழக்கமான முறையில் நீங்கள் ஹியூமிடிஃபையரை சுத்தம் செய்ய வேண்டும். இது அவற்றில் பாக்டீரியா வளர்ச்சியை தவிர்க்கும்.
சளி மற்றும் இருமல் தொந்தரவை விரட்டும் ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள்
ஓய்வு : உங்கள் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்கும் பொழுது தொற்றை எதிர்த்து சமாளிக்க கூடிய திறனை அது இயற்கையாகவே பெறுகிறது. கடினமான செயல்பாடுகள் செய்வதை தவிர்த்து விட்டு, போதுமான அளவு தூக்கம் பெறுங்கள்.
தலையை உயர்த்தி படுக்கவும் : தூங்கும்போது உங்கள் தலை சற்று உயர்த்தப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இது மூக்கடைப்பை குறைக்கும். இதற்கு நீங்கள் ஒரு தலையணைக்கு பதில் இரண்டு தலையணைகளை பயன்படுத்தலாம்.
மூலிகைகள் : யூகலிப்டஸ் எண்ணெய், புதினா எண்ணெய் போன்ற மூலிகைகள் வீக்கம் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை சைனஸ் காரணமாக ஏற்படும் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
காரமான உணவுகள் : மிளகு, குடைமிளகாய் போன்ற காரசாரமான உணவுகள் சுவாச பாதையை சுத்தம் செய்து சளியை மெல்லியதாக்கி அதனை வெளியேற்றும். எனினும் காரமான உணவுகள் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. உணர்திறன் கொண்ட வயிறு கொண்டவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
எரிச்சல் ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்கவும் சிகரெட்டு புகை, வலுவான வாசனைகள் மற்றும் காற்றின் மூலமாக பரவும் ஒவ்வாமைப் பொருட்களை முடிந்த அளவு தவிர்ப்பது சுவாச பாதையில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
இந்த வீட்டு வைத்தியங்கள் லேசான மற்றும் மிதமான சைனஸ் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட உள்ளவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கலாம். எனினும் உங்களுக்கு சைனஸ் வலி, அதிக காய்ச்சல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். மேலும் நாள்பட்ட சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவர்களின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டு பின்பற்ற வேண்டும்.