இன்றைய ராசி பலன் 08-03-24

by Editor News

மேஷம்:

இன்று உங்கள் காதல் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நடைபெறும் ஒரு சுவாரஸ்யமான அல்லது எதிர்பாராத சந்திப்பு உங்கள் வாழ்க்கையில் ஒரு உணர்ச்சிமிக்க சம்பவத்தை பதிவு செய்யலாம். உங்களது திட்டமிட்ட வேலைகளை செய்து முடிக்க இன்று கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்று சுய பாதுகாப்பு மற்றும் ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ரிஷபம்:

உங்கள் காதல் வாழ்வில் இன்று துணையுடன் அதிக உணர்வுபூர்வமாக நெருக்கமாகவும் இருக்க உங்களின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டும். விடாமுயற்சியும்,பொறுமையும் நீங்கள் கடைபிடித்தால் தடைகளைத் தாண்டி உங்கள் இலக்குகளை அடைய முடியும். தோட்டக்கலை அல்லது ஓவியம் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் உங்களை உற்சாகமாக வைத்து கொள்ளலாம்.

மிதுனம்:

இல்லற மற்றும் காதல் வாழ்வில் இருப்பவர்கள் இன்று எதிர்பாராத மகிழ்ச்சிக்கு தயாராக இருங்கள். புதிய வாய்ப்புகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் பணியிடத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் யோசனைகளை தெளிவாக வெளிப்படுத்த முயற்சிப்பது நல்ல பலன்களை பெற்று தரும்.

கடகம்:

உங்கள் திறமைகளை மேம்படுத்தி, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடுவதில் இன்று கவனம் செலுத்துங்கள். உறவுகளை பொறுத்தவரை வெளிப்படையாக இருப்பது பிரச்சனைகளை குறைக்கும். இன்று உங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய பொழுது போக்குகள், பயணங்களில் ஆர்வம் காட்டுவது நாளை சிறப்பாக முடிக்க உதவும்.

சிம்மம்:

காதல் உறவில் இதுநாள் வரை நீடித்த சிக்கல்கள் இன்று தீரும். வேலைகளில் உங்களின் தலைமைத்துவம் மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்கள் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறும். இதன் மூலம் உரிய அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வு தேடி வரலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்று முன்னுரிமை கொடுங்கள். ஓய்வு அல்லது ஓவியம் வரைதல் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது உங்களை இயல்பாக வைக்கும்.

கன்னி:

உங்களின் காதல் வாழ்க்கை இன்று நிலையானதாகவும், அமைதியாகவும் செல்லும். ஏற்கனவே சிக்கலில் இருக்கும் உறவுகள் இன்று பிரச்சனைகள் நீங்கள் வலுவடைய வாய்ப்பு உள்ளது. உங்களின் நேர்மறை குணாதிசயங்கள் இன்று நீங்கள் வெற்றி பெற உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளில் இன்று கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

காதல் உறவில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இன்று பணத்தை செலவழிப்பார்கள். வேலைகளை பொறுத்தவரை பணியிடத்தில் கிடைக்கும் ஒத்துழைப்பு உரிய நேரத்தில் வேலைகளை நிறை செய்ய உதவும். சுய பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

விருச்சிகம்:

உங்கள் காதல் வாழ்க்கை இன்று வலுவாக இருக்கும். உங்களது துணை இன்று உங்கள் உணர்வுகளின் ஆழத்தை புரிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு இருக்கும் உற்சாகமும் விடாமுயற்சியும் வெற்றியை நோக்கி உங்களை உந்தி தள்ளும். உங்கள் மனஆரோக்கியத்திற்கு இன்று முன்னுரிமை கொடுங்கள்.

தனுசு:

இன்று நீங்கள் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவரை சந்திப்பீர்கள். இன்று கிடைக்கும் புதிய உறவை ஏற்றுக்கொண்டு, உங்கள் காதல் வாழ்க்கையில் உற்சாகத்தை அனுபவியுங்கள். உங்கள் நேர்மறை எண்ணம் மற்றும் ஆற்றல் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மகரம்:

இன்று உங்களின் காதல் உறவு திடமாகவும், நிலையானதாகவும் இருக்கும். உங்களது இலக்குகளை அடைய அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பண ஆதாயங்கள் இன்று கிடைக்கலாம். சுய கவனிப்பு இன்று உங்களுக்கு தேவையான ஒன்று.

கும்பம்:

இன்று உங்களின் காதல் வாழ்க்கை வழக்கத்திற்கு மாறானதாக இருக்க கூடும். இன்று கிடைக்கும் புதிய உறவுகளை ஏற்று கொள்ளுங்கள். உங்களின் நேர்மறை எண்ணங்களும், தலைமைத்துவமும் பணியில் நீங்கள் வெற்றி பெற உதவும். அறிவார்ந்த நபர்களை சந்தித்து அறிவுசார் உரையாடல்களில் ஈடுபடுவது, ஓய்வளிக்கும் இடங்களுக்கு பயணிப்பது உங்களை அமைதியாக வைக்கும்.

மீனம்:

உங்களின் காதல் உறவு இன்று உணர்ச்சி ரீதியாக இணைக்கப்படும். உங்களின் கலைத் திறமை மாறும் செயல்திறன் காரணமாக பாராட்டுகளை பெறுவீர்கள். எனினும் வேலைக்கும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மனஅமைதியை தரும். மாலை நேரத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம்.

Related Posts

Leave a Comment