சருமத்தில் பருக்கள் வராமல் தடுக்க ..

by Editor News

பருக்கள் உ்ண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அதிகப்படியான சீபம் சுரப்பு தொடங்கி, பாக்டீரியா தொற்றுக்கள் வரை பல்வேறு காரணிகள் இருநு்தாலும் இவை எல்லாவற்றையும் முழுமையாக சரிசெய்ய முடியும் என்றால் அது உணவால் தான் முடியும். அந்த வகையில் கீழ்வரும் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறவர்களுக்கு பருக்கள் வருவது குறையுமாம்.

இலைவடிவ காய்கறிகள் :

இலைவடிவ காய்கறிகளை ஆன்டி ஆகு்சிடண்டுகளின் பவர்ஹவுஸ் என்று கூட சொல்வார்கள்.

இந்த இலைவடிவ காய்கறிகள் இன்ஃபிளமேஷன்களை எதிர்த்துப் போராடும். இதனால் உங்களுடைய சருமமும் ஆரோக்கியமாக மாறும். பருக்கள் உற்பத்தியும் குறையும்.

​வைட்டமின் சி நிறைந்த பழங்கள் :

வைட்டமின் சி நிறைந்த பழங்களை தினசரி டயட்டில் சேர்த்துக் கொண்டு வரும்போது முகப்பருக்கள் குறைய ஆரம்பிக்கும்.

பருக்கள் வருவதைத் தவிர்க்க முடியும். இவற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதோடு சீபம் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.

முழு தானியங்கள் :

தானியஙகள் சாப்பிட்டாலட பருக்கள் குறையுமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். முழு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு சீரான எனர்ஜியைக் கொடுபு்பதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

முழு தானியங்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை சீராக்கி கழிவுகளை முறையாக வெளியேற்றும். இதனால் சருமத்தில் பாதிப்பு ஏற்படுவது குறையும்.

​நட்ஸ் மற்றும் விதைகள் :

நட்ஸ் மற்றும் விதைகளில் நிறைய ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு இவற்றில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகம். இதனால் நட்ஸ் மற்றும் விதைகளை உணவில் சேர்த்து வந்தால் நீங்கள் க்ளியர் ஸ்கின்னை பெறலாம்.

இவற்றிலுள்ள ஜிங்க் மற்றும் பிற மினரல்கள் இன்ஃபிளமேஷன்களை குறைக்கும். அதனால் உடல் மட்டுமின்றி சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

​சர்க்கரை வள்ளிக்கிழங்கு :

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய உடலில் வைட்டமின் ஏ -வாக கிடைக்கும்.

இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் சரும செல்களை புதுப்பிக்கும். இதனால் சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

​தக்காளி :

காய்கறிகளிலேயே தக்காளியில் தான் அதிக அளவில் லைகோபின் இருக்கிறது. இது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டாகும்.

இதில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகம். இவை சருமத்தில் உள்ள பருக்களை விரட்டுவதோடு கருமை மற்றும் பிக்மண்டேஷனை போக்கும்.

க்ரீன் டீ :

ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளும் அதிகமாக இருக்கின்றன.

இவை இரண்டுமே சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்து சருமத்தை க்ளியராகவும் பருக்கள் இல்லாமலும் வைத்துக் கொள்ள உதவும்.

ப்ரோ – பயாடிக் உணவுகள் :

மோர், யோகர்ட் போன்ற ப்ரோ – பயாடிக் உணவுகளில் நிறைய நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது.

ப்ரோ பயாடிக் உணவுகள் சருமத்திலுள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் தாக்கத்தைக் குறைத்து பருக்கள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை சரிசெய்யும்.

Related Posts

Leave a Comment