பெண்கள் பிரசவத்திற்கு பின்பு இந்த தவறுகளை செய்யாதீங்க.!

by Editor News

பொதுவாகவே குழந்தை பேரு என்பது விலங்குகள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். குழந்தை கருவில் உருவாவது முதல் பிறந்து குறிப்பிட்ட வயதாகும் வரை குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது போன்று குழந்தையின் தாயையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது நார்மல் டெலிவரி, சிசேரியன் என எந்த முறையில் குழந்தை பிறந்து இருந்தாலும் குழந்தை பிறப்பிற்கு பின்பு பெண்கள் குறிப்பிட்ட வேலைகளை குறிப்பிட்ட காலம் வரை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

கனமான பொருட்களை தூக்குவது, அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறுவது, நீண்ட நேரம் குனிந்து வேலை செய்வது போன்ற கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும். பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு துணைக்கு ஆள் இருத்தல் வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குவது, உடல் சுகாதாரமாக இருப்பது போன்றவை தாய்க்கு மட்டுமல்லாமல் சிசுவிற்கும் நன்மையை தரும்.

Related Posts

Leave a Comment