பன்னீர் செய்வதற்கு பாலை திரிவதற்கு நாம் எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவோம். ஆனால், அதற்கு பதிலாக தயிரை பயன்படுத்தினால், பன்னீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.
அதுபோல், உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை தூர கொட்டாமல், அதை வைத்து பாத்திரம் கழுவினால் பாத்திரம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
குலாப் ஜாமுவை எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரை பாகில் போடுவோம். இதனால் குலாப் ஜாமு உடையும். எனவே, சர்க்கரை பாகு நன்கு ஆறிய பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்த ஜாமுன்களை உள்ளே போடுங்கள். அது உடையாது..
எந்த வகையான குருமா செய்தாலும், வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றுங்கள். இதனால் குருமா மணமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
துவரம் பருப்பில் சாம்பார் செய்ய பருப்பை வேக வைக்கும் போது அதனுடன் சிறுதளவு வெந்தயம் சேர்த்து வேக வையுங்கள். இதனால் இரவு வரை சாம்பார் கெடாமல் இருக்கும்.