தேவையான பொருட்கள் :
முட்டை – 4
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1/2
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
சீராக தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வேகவைத்த முட்டையை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை குறைத்து மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நறுக்கிய முட்டைகளை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதே எண்ணையில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
அதன் பச்சை வாசனை போனவுடன் மல்லி தூள், சீராக தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
குறிப்பு : உங்கள் விருப்பத்திற்கேற்ப மிளகு தூள் சேர்த்து கொள்ளுங்கள்
பிறகு சிறிதளவு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து நன்றாக கலந்து வறுத்து இறக்கினால் காரசாரமான முட்டை மிளகு வறுவல் ரெடி…