பிலிப்பைன்ஸில் அரிசிக்காகப் போராட்டத்தில் குதித்த மக்கள்!

by Editor News

பிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாதவகையில் உச்சத்தைத் தொட்டு வருகின்றது.

குறிப்பாக கடந்த டிசம்பருடன் ஒப்பிடுகையில் பணவீக்கமானது 22.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசியின் விலை இதுவரை இல்லாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலைக்கு கையிருப்பில் உள்ள அரிசியை அதிகாரிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்ததே காரணம் என குற்றம் சாட்டப்படுகின்றது.

இதற்கிடையே அரிசியின் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரிசி விற்பனை ஊழல் தொடர்பாக தேசிய உணவு ஆணையத்தின் தலைவர், அதிகாரிகள் உட்பட 138 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாயத் துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ டியு லாரல் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment