டூத் பிரஷ் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் தெரியுமா..

by Editor News

காலையில் எழுந்ததும் பல் துலக்குவது என்பது ஒரு அடிப்படையான விஷயம். ஆனால் சிலர் பல வருஷங்களாக தொடர்ந்து ஒரே டூத் ப்ரஷை பயன்படுத்தி பல் துலக்குவார்கள். இப்படியே பழைய ப்ரஷை பயன்படுத்தினால் நம் வாய் சுகாதாரத்திற்குப் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.

பழைய டூத்ப்ரஷ் பயன்படுத்துவதை எப்போது நிறுத்த வேண்டும்?ஒரு டூத் ப்ரஷை வாங்கினோம் என்றால் அது சுக்கு நூறாக பிய்ந்து போகும் வரை பயன்படுத்தும் பழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். சுகாதாரம் என்று வரும்போது சில அடிப்படையான விஷயங்கள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு நல்ல டூத் ப்ரஷ், குளியலுக்கு சோப் பயன்படுத்துவது போன்ற சில எளிமையான பழக்கங்களை பலர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.​

பழைய டூத்ப்ரஷ் பயன்படுத்துவதை எப்போது நிறுத்த வேண்டும்?

ஒரு டூத் ப்ரஷை வாங்கினோம் என்றால் அது சுக்கு நூறாக பிய்ந்து போகும் வரை பயன்படுத்தும் பழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். சுகாதாரம் என்று வரும்போது சில அடிப்படையான விஷயங்கள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு நல்ல டூத் ப்ரஷ், குளியலுக்கு சோப் பயன்படுத்துவது போன்ற சில எளிமையான பழக்கங்களை பலர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.​

சரியான இடைவெளியில் உங்கள் டூத்ப்ரஷை மாற்றுங்கள் :

பற்களின் ஆரோக்கியம் கெடாமல் இருக்க வேண்டுமென்றாலோ அல்லது உங்களின் வாய் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டுமென்றாலோ டூத்ப்ரஷை சீரான இடைவெளியில் புதிதாக மாற்றுங்கள். உடைந்து போன, கிழிந்து போன டூத்பரஷை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். இதுபோன்ற பிய்ந்து போன டூத்ப்ரஷை பயன்படுத்தும் போது பற்களில் இருக்கும் பாக்டீரியா, கசடுகளை அகற்ற முடியாது. ஒரு டூத்ப்ரஷை இத்தனை மாதம்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. அதை தெரிந்துகொள்ளுங்கள்.

3 அல்லது 4 மாதங்களில் புதிதாக மாற்றுங்கள்​ :

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் டூத்ப்ரஷை மாற்றுங்கள் என பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நைந்து போன டூத்ப்ரஷை தான் தொடர்ந்து பயன்படுத்துவேன் எனக் கூறினால் பல் சொத்தை, ஈறுகளில் வரும் நோய்கள் எனப் பல பிரச்சனைகள் வரக்கூடும்.

நோயிலிருந்து மீண்டபிறகு மாற்று வேண்டும் :

சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோயிலிருந்து குணமானதும் முதல் வேலையாக உங்கள் டூத்ப்ரஷை மாற்றுங்கள். ஏனென்றால் உங்களின் டூத்ப்ரஷில் வைரஸ், பாக்டீரியா போன்றவை தொற்றிக்கொண்டிருக்கும். இதனால் மறுபடியும் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது. நோயிலிருந்து மீண்டதும் புதிய டூத்ப்ரஷை பயன்படுத்துவதால் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

எலக்ட்ரிக் டூத்ப்ரஷை 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும் :

நீங்கள் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் பயன்படுத்துபவராக இருந்தால், அதன் தலைப்பகுதியை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஏனென்றால் சாதாரண ப்ரஷை விட எலக்ட்ரிக் டூத்ப்ரஷ்கள் வேகமாக சுழல்வதாலும் அசைவதாலும் சீக்கிரமாக பிய்ந்து போக அதிக வாய்ப்புள்ளது.

பல் சிகிச்சை செய்த பிறகு மாற்றவும் :

பற்களில் அறுவை சிகிச்சையோ அல்லது ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை எடுத்திருந்தாலோ, குணமானப் பகுதியில் மீண்டும் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க பழைய டூத்ப்ரஷை மாற்றிவிட்டு புது டூத்ப்ரஷை பயன்படுத்துங்கள்.

அடிக்கடி பயணம் செய்யும் நபர்கள் :

அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவராக இருந்தால் டூத்ப்ரஷை கவர் போட்டு மூடி கொண்டு செல்வோம். ஆனால் இது எந்தளவிற்கு சுகாதரமாக இருக்கும் என நமக்கு தெரியாது. பயணம் செய்கையில் நாம் கொண்டு போகும் பைகளில் அல்லது டூத்ப்ரஷ் கவர்களில் தூசிகள், அழுக்குகள் பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் பயணத்தின் போது கூடுமானவரை புதிய டூத்ப்ரஷ் வாங்கி பயன்படுத்துங்கள்.

குழந்தைகளிடத்தில் சிறப்பு கவனம் தேவை :

பெரியவர்கள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை விட குழந்தைகள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை அடிக்கடி மாற்ற வேண்டும். ஏனென்றால் அவை சிறியதாகவும் மென்மையாகவும் இருப்பதாலும், குழந்தைகள் சில சமயங்களில் வாயில் வைத்து கடிப்பதாலும் சீக்கிரமகவே உடைந்து போகிறது. உங்கள் குழந்தையின் டூத்ப்ரஷ் எப்படியிருக்கிறது என்பதை அடிக்கடி பெற்றோர்கள் கண்காணிக வேண்டும்.

Related Posts

Leave a Comment