திருமண உறவில் பொதுவாக சில சமயங்களில் உங்கள் துணையிடமிருந்து துண்டிக்கப்பட்டது போல் நீங்கள் உணரலாம். இது இயற்கையானது தான். பெரும்பாலும், உறவின் ஆரம்ப கட்டங்களில் துணை உடன் கொண்டிருந்த நெருக்கமும், விருப்பமும் இப்போது இல்லை என்று அடிக்கடி உணரலாம். அதே போல் திருமண உறவில் சில சமயங்களில் உடலுறவை விரும்புவதும், மற்ற நேரங்களில் முற்றிலும் ஆர்வமில்லாமல் இருப்பதும் இயல்பானது.
ஒரு காலக்கட்டத்தில் உடலுறவு எப்படி மிகவும் முக்கியமானதாக இருக்கிறதோ அதே போல் சில நேரங்களில் முக்கியமற்றதாகவும் இருக்கலாம். திருமணமான தம்பதிகள் பலரும் இந்த பிரச்சனையை எதிர்க்கொண்டு வருகின்றனர். திருமண உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் ஆசை மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உறவின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆரோக்கியமான தொடர்பு. தம்பதிகள் ஒருவருக்கொருவர் தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாக பேச வேண்டும், மேலும் உங்கள் துணையிடம் இருந்து உங்களுக்கு என்ன தேவை, அதே போல் உங்களிடம் இருந்து உங்கள் துணைக்கு என்ன தேவை என்பதை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும். இது உறவில் சிறந்த புரிதலை உருவாக்க உதவுகிறது.
ஒவ்வொரு உறவிலுமே ஒரு குறிப்பிட்ட அளவிலான நட்பு இருக்கும்., அது இரண்டு நபர்களை ஒன்றாக இணைக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் நேர்மையாக இருக்க அனுமதிக்கிறது. அந்த நட்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது மனக்கசப்பு மற்றும் விரக்தியை ஆரோக்கியமான முறையில் தீர்க்க உதவும்.
உறவுக்கும் துணைக்கும் முன்னுரிமை கொடுத்து, உங்கள் துணையுடன் ஒன்றாகச் செலவழிக்க நேரத்தைச் செலவிட முயற்சி செய்ய வேண்டும். ஒன்றாக வீட்டு வேலை செய்வது அல்லது ஒன்றாக படம் பார்ப்பது போன்றவற்றை செய்யலாம். உங்கள் துணை உடன் நல்ல நினைவுகளை உருவாக்குவது அல்லது அவர்கள் உடனான மோதல்களை நிவர்த்தி செய்வது தொடர்பை ஆழப்படுத்த உதவும்.
புதிய விஷயங்களை ஒன்றாக ஆராய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது புதிய விஷயங்களை ஆராயவும், ஆய்வில் மகிழ்ச்சியைக் காணவும் உதவும். புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் துணைக்கும் அதில் விருப்பம் இருந்தால் இருவரும் ஒன்றாகவே கற்றுக்கொள்ளலாம்.
நாம் இருக்கும் சூழல் நமது உறவுகளை பெரிதும் பாதிக்கலாம். எனவே உங்கள் சுற்றுப்புறச் சூழலையும் உன்னிப்பாகக் கவனித்து, அதில் நமக்கு எது பிடிக்கும் அல்லது எது பிடிக்காது புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தடுக்க முடியும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.