வெளிப்புற விஷயங்கள்… அடிக்கடி கை கழுவுவது, கடினமான ரசாயனங்கள் கைகளில் படுவது, அதிகப்படியான ஈரப்பதம் போன்றவை கை நகங்களை வறட்சியாக்கிவிடும். இதனால் அவை எளிதில் உடைந்து போகின்றன.
வயது: நமக்கு வயது அதிகரிக்க, அதிகரிக்க நகங்கள் வளர்வது மெதுவாகிறது. இதன் காரணமாகவும் நகங்கள் பலவீனமடைகின்றன.
நோய்கள்: தைராய்டு பிரச்சனை, தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சில குறிப்பிட்ட பிரச்சனைகள் இருந்தால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
தவறுதலான அழகு சிகிச்சை: அடிக்கடி நகங்களில் ஜெல் பயன்படுத்துவது, கடினத்தன்மை வாய்ந்த நெயில் பாலிஷ்களை பயன்படுத்துவதாலும் நகங்கள் பலவீனமடைகின்றன.
நகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் இங்கே…
விரல்களை பாதுகாத்திடுங்கள்: எதையாவது சுத்தம் செய்யும் போது கையுறை அணிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அதிகப்படியான தண்ணீர் உங்கள் கைகளில் படுவது தவிர்க்கப்படும்.
ஜெல் மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தாதீர்கள்: அடிக்கடி ஜெல்களை பயன்படுத்துவதால் நாளடைவில் இயற்கையான நகங்கள் பாதிப்பிற்குள்ளாகும்.
ஆரோக்கியமான டயட்: புரதம் மற்றும் பயோடின் சேர்ந்த சரிவிகித டயட்டை கடைபிடியுங்கள். இவை நகங்களின் முக்கிய கூறுகளாக உள்ள கெராடின் வலிமையாவதற்கு உதவும்.
நகம் கடிக்காதீர்கள்: உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களின் நகம் பலவீனமடைந்து பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. உடனே இந்தப் பழக்கத்தை விட்டொழியுங்கள்.
நகம் வெட்டுங்கள்: நகங்கள் உடைந்து போகாமல் இருக்க சீரான இடைவெளியில் நகங்களை வெட்டி பராமரிக்க வேண்டும்.
நீர்ச்சத்து: உங்கள் நகங்களுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்க ஆல்கஹால் கலக்காத மாய்ஸ்சரைசர் மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.
நெயில் பாலிஷ்: நைலான ஃபைபர்களை பயன்படுத்தி பாலிஷ் செய்யுங்கள். அப்போதுதான் தேவையில்லாமல் நகம் கடிக்கமாட்டீர்கள்; நகங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.