தேவையான பொருட்கள் :
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 2 கப்
தயிர் – 4 ஸ்பூன்
பொடித்த சர்க்கரை – 2 ஸ்பூன்
சோடா உப்பு – 2 சிட்டிகை
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் மைதா மாவு, தயிர் மற்றும் சோட உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு ரொம்பவும் கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இல்லாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பிசைந்த மாவை மூடி அப்படியே தனியாக வைத்து விடவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து அது முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பாகு ரெடி செய்து கொள்ளவும்.
குறிப்பு : உங்களுக்கு விரும்பமென்றால் நீங்கள் பாகில் நுணுக்கிய ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் நாம் ரெடி செய்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உங்களுக்கு தேவையான வடிவில் உருண்டையாகவோ அல்லது வட்டமாகவோ வடிவமைத்து கொள்ளுங்கள்.
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து உருட்டி வைத்துள்ள மாவை அதில் போட்டு பொரித்து கொள்ளவும்.
பன் நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து அதை அப்படியே பாகில் சேர்த்து கிளறி கொள்ளுங்கள்.
சிறிது நிமிடங்கள் கழித்து பார்த்தால் சுவையான நாவில் வைத்தால் கரையும் படியான பால் பன் ரெடியாக இருக்கும்.