வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 5
சர்க்கரை – 1/4 கப்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
முந்திரி, உலர் திராட்சை – தேவையான அளவு
வாழைப்பழ அல்வா செய்முறை:
வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது அந்த துண்டுகளை மசிக்கவும் அல்லது மிக்ஸி ஜாரில் அரைக்கவும். அதே நேரத்தில், கேஸில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கி கொண்டே இருக்கவும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளரவும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி..!!!