சமையல் டிப்ஸ்..

by Editor News

சமையலறையில் சமைக்கும் போது நம் வேலையை எளிதாக்கும் சில குறிப்புகள் மற்றும் நுணுக்கங்களை அறிந்தால் அது நமக்கு ஒரு வரப்பிரசதமாக இருக்கும். எனவே, இப்போது உங்களுடைய வேலையை எளிதாக்கும் சமையலறை தொடர்பான சில முக்கியமான விஷயங்களை பற்றி இங்கு பார்க்கலாம்…

நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசியில் வண்டுகள் பூச்சிகள் தங்காமல் இருக்க கருவேப்பிலையை அரிசியில் போட்டு வையுங்கள்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது வெட்டிய உருளைக்கிழங்கை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை பொறித்து எடுத்தால் உருளைக்கிழங்கு சிப்ஸ் முற்றிலுமாக மிருதுவாக இருக்கும்.

மென்மையான இட்லி செய்ய சிறிது புழுங்கல் அரிசியை அதனுடன் சேர்த்து அரைத்தால், இட்லி மிகவும் மென்மையாக மாறும்.

பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், சமைத்த பிறகும் காய்கறி நிறத்தை பச்சையாக வைத்திருக்கும்.

வெண்டைக்காய் சமைக்கும் போது அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது அரை டேபிள் ஸ்பூன் உலர் மாம்பழத் தூள் சேர்க்கவும். இதனால் வெண்டைக்காய் ஒட்டாமல் இருக்கும்.

சப்பாத்தி சாப்பிடுவதற்கு சாப்டாக இருக்க சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் சிறிது பால் ஊற்றி பிசைய வேண்டும்.

பூரி அல்லது பக்கோடா செய்யும் போது, எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால், அவை குறைந்த எண்ணையை உறிஞ்சும். இது எண்ணெயை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

நெய் காய்ச்சும் போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்தால் மணமாகவும் இருப்பதோடு மட்டுமின்றி, அது நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

Related Posts

Leave a Comment