தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் – 3
மைதா – 3 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கரம் மசாலா – கால் ஸ்பூன்,
பூண்டு – 1,
பச்சை மிளகாய் – 1,
சில்லி சாஸ் –
தக்காளி சாஸ்
சோயா சாஸ்
செய்முறை :
ஒரு வெங்காயத்தை மெலிதாக நீளவாககில் நறுக்கிக் கொள்ளுங்கள். மற்றொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மற்றொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நறுக்கிய வெங்காயத்தை ஒரு பௌலில் சேர்த்து நன்கு உதிர்த்து விடுங்கள். அதில் 3 ஸ்பூன் மைதா அல்லது சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம். அதில் அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
நன்கு கெட்டியாக பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். (அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரியுங்கள்).
அடுத்ததாக அடுப்பில் வேறொரு கடாயை வைத்து 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின்பு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
நன்கு வதங்கியதும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும் அதில் பொரித்து வைத்திருக்கும் ஆனியன் பால்ஸை சேர்த்து வதக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கிய கொத்மல்லி இலை மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்தது இறக்கினால் சுவையாக ஹோட்டல் ஸ்டைல் மஞ்சூரியன் ரெடி.