உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று நம் வாழ்வில் சிறப்பு வாய்ந்த பெண்களை கொண்டாடும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது சமூகங்களை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்புகளையும் முயற்சிகளையும் கொண்டாடுகிறது. சர்வதேச மகளிர் தினம் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை நினைவு கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும்.
2024 சர்வதேச மகளிர் தினம் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
சர்வதேச மகளிர் தினம் 1977-ல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. முன்னதாக, 1908ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த பணி சூழலை எதிர்த்து போராடிய ஆடை பெண் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர் இயக்கங்களின் நடவடிக்கைகளில் இருந்து முதலில் தோன்றியது. பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுதல், பெண்களின் சமத்துவத்திற்கான கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களை முன்னேற்றுவதற்கான நேர்மறையான மாற்றத்திற்கான அழைப்பு துரிதப்படப்பட்ட பாலின சமத்துவத்திற்கான பரப்புரை மற்றும் பெண்களின் மையமாகக் கொண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாளில் பலவிதமான பிரசாரங்கள் நிகழ்வுகள் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
2024 சர்வதேச மகளிர் தினம் தேதி:
சர்வதேச மகளிர் தின மார்ச் 8, 2024 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகளிர் தினம் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இது வார இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
2024 சர்வதேச மகளிர் தினம் கருப்பொருள்:
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் “இன்ஸ்பயர் இன்க்லூஷ்ன்”, அதாவது பாலின வேறுபாடின்றி அனைவரும் உள்ளடக்கப்பட்டு, மதிக்கப்படும் மற்றும் உலகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
பெண்களின் சாதனைகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளை கௌரவிக்கவும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அங்கீகரித்து, இன்னும் இருக்கும் சவால்களை முன்னிலைப்படுத்த இது ஒரு நல்ல நாள் ஆகும். பெண்களின் சமூகம் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், உலகளவில் பாலின சமத்துவத்தை அடைய தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுப்பதற்கும் இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாக அவர்களுக்கு அமையும்.