உடலில் உள்ள கொழுப்பு கரைய இந்த டீ குடிங்க!

by Editor News

அதிகமாக காபி மற்றும் டீ குடிப்பதால் உடலில் அதிகப்படியான காஃபின் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக மனநலம் பாதிக்கப்படலாம். மேலும் தேநீரில் சர்க்கரையும் சேர்க்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், வழக்கமான டீயை கைவிட்டு, ஆம்லா டீயைக் குடிக்கலாம். இதில் சர்க்கரை சேர்க்கப்படுவது கிடையாது. இதை குடிப்பதும் மிகவும் ஆரோக்கியமானது.

ஆம்லா ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்பர் ஃபுட்Gooseberry tea helps to lose weight fast. இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது முடி, கண்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும். நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வதால் உடல் பருமன் குறைகிறது.இதற்கு தினமும் காலையில் ஆம்லா டீ குடிக்க வேண்டும். ஆம்லா டீ குடிப்பதால் வயிற்றில் படிந்திருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதாவது உடம்பை முழுமையாக டீடாக்ஸ் செய்ய நெல்லிக்காய் பயன்படுகிறது.

ஆம்லா டீ செய்வது எப்படி? : நெல்லிக்காய் தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சிறிது இஞ்சி மற்றும் 4-5 துளசி இலைகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இப்போது 1 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் பாதி அளவிற்கு குறைந்து வந்ததும், கோப்பைகளில் ஊற்றி பரிமாறலாம். இதில் இனிப்பு சுவைக்காக வெல்லம், தேன், சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கக்கூடாது.இரண்டு நெல்லிக்காய் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இப்போது அடுப்பை சிம்மில் வைத்து தேவையான அளவு தண்ணீர் வைத்து நெல்லிக்காய், இஞ்சித் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து இறக்கவும். இது பச்சை நெல்லிக்காயைக் கொண்டு தேநீர் தயாரிக்கும் முறையாகும். நீங்கள் விரும்பினால், தேநீர் தவிர வேறு எந்த பானத்திலும் அல்லது ஸ்மூத்தியிலும் இது போன்று ஆம்லா பொடியை பயன்படுத்தலாம். இவற்றை குடித்தால் கொழுப்பு குறைவதோடு, உடல் எடையும் விரைவில் குறையும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

ஆம்லா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நெல்லிக்காய் டீயை தினமும் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. ஆம்லா டீ குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வைட்டமின் சி நிறைந்த ஆம்லா டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆம்லா டீ உடல் பருமனை குறைக்கும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் விரைவில் தோன்றும் சுருக்கங்களை தடுக்கிறது.நெல்லிக்காயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த தேநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குரோமியம் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை சேமிப்பை குறைக்கிறது. சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் சக்தியும் நெல்லிக்காய்க்கு உண்டு. எனவே வழக்கமான டீ காபிகளை விட்டுவிட்டு ஆம்லா டீயை முயற்சிக்கவும். சில நாட்களில் நல்ல பலனை காண்பீர்கள்.

Related Posts

Leave a Comment