இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 192 ரன்கள் இலக்கு என்பதை நோக்கி தற்போது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் நினைவுச்சியில் 353 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்ததால் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி ரோகித் சர்மா 55 ரன்கள், ஜெய்ஸ்வால் 37 ரன்களிலும் அவுட் ஆன நிலையில் தற்போது சுப்மன் கில் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா கைவசம் ஏழு விக்கெட்டுகளை வைத்துள்ளதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.