தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை – 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்
உப்பு – 1.25 தேக்கரண்டி
மற்ற பொருட்கள் :
எண்ணெய்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அந்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, எண்ணெய், தேவையான அளவு உப்பு, மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை & கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் மரினேட் செய்து தனியாக வைக்கவும்.
அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளை அருகருகே வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.
பிறகு தீயை குறைத்து மேலும் 3 நிமிடங்களுக்கு தொடர்ந்து வறுக்கவும்.
இப்போது மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி மறுபுறம் மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.
பின்னர் குறைந்த வெப்பத்தில் மற்றொரு 3 நிமிடங்கள் வறுக்கவும்.
பிறகு அதன் மென் கறிவேப்பிலை இலைகளை தூவி கொள்ளுங்கள்.
பிறகு அதை மீண்டும் திருப்பி இருபுறமும் 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் தொடர்ந்து வறுத்து எடுத்தால் ருசியான மீன் வறுவல் ரெடி.