பல்வேறு பிரச்சினைகளைச் சரிசெய்ய 5 முத்திரைகள்…

by Editor News

சின் முத்திரை

சின் முத்திரை ஆண், பெண் இருவருமே செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யும்போது அவர்களுடைய உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு நிறைய தீர்வு கொடுக்கும். சின் முத்திரையை பெண்கள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 நிமிடங்கள் வரை செய்து வரும்போது அவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, ஓவர் திங்கிங் ஆகியவற்றை சமன் செய்யும். மனதுக்கு அமைதியைக் கொடுக்கும்.

​சக்தி முத்திரை

பெண்களுக்கு மிகச்சிறப்பாக பலனளிக்கும் முத்திரை இது. உடலுக்கு அதிகப்படியான ஆற்றலைக் கொடுக்கக் கூடியது.

செய்ய ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே பயன்தரக்கூடிய முத்திரைகளில் இந்த சக்தி முத்திரையும் ஒன்று.

பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு, முதுகு, அடிவயிற்றில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவி செய்யும்.

அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தைச் சரிசெய்யும்.

​வாயு முத்திரை

அதன் பெயரிலேயே இந்த முத்திரையின் அடிப்படை உங்களுக்குப் புரிந்திருக்கும். வாய்வுத் தொல்லையைத் தீர்க்கும் அற்புதமான முத்திரை இது. வாதம் தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய இந்த முத்திரை உதவி செய்யும்.

பெண்களுக்கு வயிற்றில் காற்று அடைபட்டு, வயிறு உப்பிப் போயிருக்கும். குறிப்பாக புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். அந்த காற்றை வெளியேற்ற வாயு முத்திரை செய்யலாம்.

மனப் பதட்டத்தைக் குறைக்க இந்த வாயு முத்திரை தினமும் செய்து வரலாம்.

வருண முத்திரை – நீர் தொடர்பான பிரச்சினை

உடலில் உள்ள வறட்சியை போக்கி நீர்ச்சத்து சமநிலையை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு உண்டாவதை தடுக்கவும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயல்படும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க இந்த முத்திரை பயன்படுகிறது.

​யோனி முத்திரை

யோனி முத்திரை பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய முத்திரைகளில் ஒன்று. பெண்களுக்கு ஏற்படும் எல்லா வகையான ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் இது சரிசெய்யும்.

பெண்களுக்கு உடலில் ஆற்றலை அதிகரிக்கும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி காலத்தில் பிராண வாயுவை அதிகரிக்கச் செய்து, மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்கும்.

இனப்பெருக்க மண்டலத்தையும் கருப்பையையும் வலுப்படுத்தும்.

இந்த 5 முத்திரைகளையும் தினமும் 10 நிமிடங்கள் செய்து வந்தாலே பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்து ஆரோக்கியமான உடலையும் மனதையும் பெற முடியும்.

Related Posts

Leave a Comment