காளான் குருமா..

by Editor News

தேவையான பொருட்கள் :

காளான், தக்காளி, வெங்காயம், பூண்டு, முந்திரி, ஏலக்காய், பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, மல்லிதழை, எண்ணெய், உப்பு, சீரகம், சோம்பு போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

காளானை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு பின்பு மிக்ஸியில் தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், முந்திரி, பூண்டு போன்றவற்றை போட்டு நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது மற்றும் காளனை சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்த பின்பு கொத்தமல்லி தலைகளை சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறலாம். கமகமக்கும் காளான் குருமா தயார்.

Related Posts

Leave a Comment