புருவத்துல முடி கொட்டுதா..அடர்த்தியா வளர 5 சூப்பர் வீட்டு வைத்தியங்கள்..

by Editor News

வெங்காய சாறு :

சின்ன வெங்காயச்சாறு சல்பர், செலீனியம், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை கொண்டது. இது கொலாஜன் உற்பத்தியை சீராக்கி முடியின் வேர்க்கால்களை வலுவாக்கும்.

பயன்படுத்தும் முறை

சின்ன வெங்காயத்தை தோலுரித்து இடித்து சாறெடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறை புருவங்களில் அப்ளை செய்து, வட்ட வடிவில் நன்கு விரல்களை வைத்து மசாஜ் செய்து விடுங்கள்.

இதை அரை மணி நேரம அப்படியே விட்டுவிட்டு, பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

விளக்கெண்ணெய் :

10 சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் போதும். உங்களுடைய புருவங்களை அடர்த்தியாக வளரச் செய்யும்.

விரல்களால் விளக்கெண்ணையைத் தொட்டு புருவங்களில் அப்ளை செய்து விட்டு, இரவு முழுக்க விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் வழக்கம் போல குளித்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து 2 மாதங்கள் செய்ய நல்ல மாற்றம் தெரியும்.

​பூண்டு சாறு – விளக்கெண்ணெய் :

பூண்டு சாறுக்கும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மை உண்டு. குறிப்பாக இதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்பு புருவங்களில் முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கிற பூஞ்சைகளை அழித்து, முடியின் வளர்ச்சியை தூண்டும்.

பயன்படுத்தும் முறை

ஒரு ஸ்பூன் பூண்டு சாறை ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையோடு கலந்து புருவங்களில் அப்ளை செய்து வர முடி நன்கு கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

​வெந்தயம்

அரை ஸ்பூன் வெந்தயத்தை இரவே கால் கப் தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்து விடுங்கள்.

அடுத்த நாள் காலையில் அந்த தண்ணீரோடு சேர்த்து வெந்தயத்தை ஸ்மூத்தான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை விரல்களால் எடுத்து புருவங்களில் அப்ளை செய்து, நன்கு மசாஜ் செய்து வர, புருவங்களில் கொட்டிய முடி நன்க செழித்து வளரும்.

மஞ்சள் கரு :

​முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் புருவங்களில் உள்ள மெல்லிய முடிகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தந்து வேர்க்கால்களை பலப்படுத்தும்.

இது புருவங்களில் முடியை அடர்த்தியா வளரச் செய்யும். இந்த வசனை பிடிக்காதவர் மேலே சொன்ன முறைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment