மசாலா டீ போட பொறுமை வேணுமே என்று சொ்லபவரா நீஙக.. இனி கவலைப்படாதீங்க… வெறும் சுமுதண்ணி மட்டும் ஊத்தனாலே மசாலா டீ ரெடியாயிடும்.
தேவையான பொருள்கள் :
பால் பவுடர் – ஒன்றரை கப்,
டீ தூள் – முக்கால் கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
ஏலக்காய் – 10-12,
இலவங்கப்பட்டை – 3 இன்ச் அளவு,
குங்குமப்பூ – 3 இலை,
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டையைச் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதிலேயே டீ தூள் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு நைசாக அரைபட்டதும் அதை ஒரு பௌலில் சேர்த்து அதோடு எடுத்து வைத்திருக்கும் பால் பவுடரையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
நன்கு கலந்த பின் இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
இந்த பவுடரில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப்பில் போட்டு, நன்கு கொதிக்கும் வெந்நீரை அதில் ஊற்றிக் கலந்தால் சுவையான நறுமணம் மிக்க மசாலா டீ ரெடி.
பால் பவுடர் சேர்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் அதை மட்டும் தவிர்த்துவிட்டு இதே முறையில் மற்ற பொருள்களை மட்டும் சேர்த்து செய்து வைத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ போலவோ அல்லது புதிதாக காய்ச்சிய பாலிலோ கலந்து குடிக்கலாம்.