மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடத்தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை இரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.