வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இங்கே உள்ளன. அவை..
நீங்கள் வாங்கும் வெங்காயம் ஈரப்பதத்துடனும், அதன் மேல் கரும்புள்ளிகளும் இருக்கக் கூடாது. இதனால் வெங்காயம் விரைவில் கெட்டுப் போய்விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதுபோல் வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்க கூடாது. ஏனெனில், ஈரப்பதம் காரணமாக வெங்காயம் சீக்கிரமே கெடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீங்கள் வாங்கி வந்த வெங்காயத்தை சூரிய ஒளிப்படாமல், ஆனால் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முக்கியமாக, வெங்காயத்தை ஒருபோதும் உருளைக்கிழங்குடன் சேர்த்து வைக்காதீங்க. இதனால் வெங்காயம் சீக்கிரமே கெட்டுப் போய்விடும்.
குறிப்பாக, வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் வைக்க கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் கூடைகளில் வைக்கலாம். இல்லையெனில், காற்றோட்டமான இடத்தில் வைக்கலாம். இதனால் வெங்காயம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
வெங்காயத்தில் தண்ணீர் பட்டால் அதன் மேல் பூஞ்சை படர்ந்து கெட்டுப் போய்விடும். எனவே, தண்ணீர் ஏதும் படாதவாறு, நல்ல உலர்ந்த இடத்தில் வையுங்கள்.