அரிசி கழுவிய நீரில் ஒளிந்திருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அரிசி கழுவிய நீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது.
அரிசி கழுவிய நீரை குடிப்பதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த நீரில் முகத்தை கழுவுவதால் சரும செல்களை சரி செய்து, முக சுருக்கத்தை தடுக்க உதவுகிறது.
அரிசி கழுவிய நீரில் நீர் சத்து நிறைந்துள்ளதால் நோய் தொற்று மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக அரிசி கழுவிய நீரில் தலைமுடியை அலசி வந்தால் முடி அடர்த்தியாகவும், நிலமாகவும் வளர உதவுகிறது.
அரிசி கழுவிய நீரை அழகு சாதன பொருட்களில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றாமல் இது போன்ற ஆரோக்கியமான நன்மைகளுக்கு பயன்படுத்தலாம்.