முகம் கருமை இல்லாமல் பளபளப்பாக தெரிய வேண்டும் என்றால் முகத்தில் இருக்கின்ற தேவையில்லாத முடிகளை நீக்குவதற்கு நாம் அடிக்கடி முகத்திற்கு எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு இரண்டையும் கலந்து தேய்த்து வரலாம்.
இந்த உத்தியை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து பளபளப்பாக காணப்படும்.
.சருமத்தில் வேர்குரு வெயில் அதிகமாக இருக்கும் போது வரும் இது அரிப்பை ஏற்படுத்தும் இதனால் முகம் அசிங்கமாக காணப்படும்.
இதற்காக மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை நன்றாக வெயிலில் உலர்த்தி காய வைத்து, அதனை அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
அதனை ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மிருதுவாகவும் அழகாகவும் காட்சி அளிக்கும்.
சிலருக்கு காலநிலை மாற்றத்தால் முகத்தில் சில சுருக்கங்கள் காணப்படும். இதற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி, சிறு பயத்தமாவை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
முகத்தில் இருக்கும் கருமை நீங்க சர்க்கரை, கற்றாழையின் ஜெல் மற்றும் பால் இம்மூன்றையும் பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் தேய்க்க வேண்டும்.
பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தின் கருமை நீங்கி அழகு பெறும்.