பார்லி டீ :
கொரியாவின் மிகப் பிரபலமான பார்லி டீ, புத்துணர்ச்சியான சுவைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. சூடான நீரில் நன்கு வறுக்கப்பட்ட பார்லி தானியத்தை பயன்படுத்தி இந்த டீ தயாரிக்கப்படுகிறது. பார்லி டீயில் எந்தவித கஃபைனும் கிடையாது என்பதோடு குறைவான கலோரிகளும் இருப்பதால் சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கிறது.
க்ரீன் டீ:
கொரியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களால் க்ரீன் டீ பருகப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள். ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ள க்ரீன் டீ பருகினால், நம் மெட்டபாலிஸம் தூண்டப்படுவதோடு உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக குறைய உதவுகின்றன.
யூஜி டீ:
கொரியாவின் பாரம்பரியமான இந்த டீ, கொரியன் சிட்ரான் அல்லது யூஜா பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது கசப்பான சுவை கொண்டது. உடல் எடை குறைப்பிற்கும் இந்த பானத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லையென்றாலும், உங்கள் சரிவிகித டயட்டில் யூஜா டீயை சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த உடல்நலனுன் ஆரோக்கியம் பெறும்.
ரோஸ் டீ:
குல்ச்சா அல்லது ரோஸ் டீ, இன்னொரு அருமையான கொரிய பானமாகும். இதை தினமும் பருகி வந்தால் உடல் எடை குறைய உதவும். குங்குமப்பூ மற்றும் ரோஜா பூவின் இதழ்களை சேர்த்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இந்த கொரிய பானத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் ஃபிளாவோனாய்ட் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ளது.
ஒமிஜா டீ:
ஐந்து சுவை கொண்ட பெர்ரி டீ என அழைக்கப்படும் ஒமிஜா டீ, Schisandra chinensis என்ற செடியில் கிடைக்கும் உலர்ந்த பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவே பலராலும் விரும்பி பருகப்படுகிறது. இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஐந்து சுவைகள் நிறம்பியது இந்த ஒமிஜா டீ. இதை பருகுவதால் நமது செரிமானம் மேம்படுவதோடு உடலின் ஆற்றலும் அதிகமாகிறது. மேலும் இந்த டீயை பருகுவதால் உடல் எடை குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.