10-ம் வகுப்பில் விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்னை 35ஆக நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் 2024-25 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 பாடங்களைத் தாண்டி விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது . விருப்ப பாடத்தை தேர்வு செய்துள்ள மாணவர்கள், இனி 6 பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் விருப்ப பாடத்தை பயிலுகின்றனர்; வழக்கமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 5 பாடங்களை எழுதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப்பாடங்களில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.