முருங்கைக் கீரை கடையல்

by Editor News

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை கடையல் செய்வதற்கு பருப்பு 1/2 கப், பூண்டு 10 பல், ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நன்றாக தட்டியது, 1 தக்காளி, முருங்கைக் கீரை 2 கப் மற்றும் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

கடையலை தாளிப்பதற்கு:

கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறிது, உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், சோம்பு 1/4ஸ்பூன், வர மிளகாய் 2 ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

முதலில் குக்கரில் பருப்பு, தக்காளி, பூண்டு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் முருங்கைகீரையை ஆய்ந்து நன்றாக கழுவி இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ள வேண்டும்.
பின்னர் இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து மத்து வைத்து ஒன்றிரண்டாக கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருமையான முருங்கைக் கீரை கடையல் ரெடி.

சூடான சாதத்துடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையும் ஆரோக்கியத்துடன், சுவையான சாப்பாடு கிடைக்கும். முருங்கை கீரையை சாப்பிட யோசிக்கும் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் என்று கூறி சாப்பிட வைத்துவிடலாம். முருங்கக்கீரையில் உள்ள சத்துக்களும் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

Related Posts

Leave a Comment