வெங்காயம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க..

by Editor News

எப்படி தினசரி காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்குகிறோமோ அதேபோல் வெங்காயத்தையும் பார்த்துதான் வாங்குகிறோம். அப்படியெல்லாம் வாங்கும் வெங்காயம், எளிதில் கெட்டுப்போனால் ஏற்க முடியவில்லை அல்லவா. வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்க சில சமையல் அறை டிப்ஸ்கள் இருக்கிறது. அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.

முதலில் வெங்காயத்தை வாங்குவதில் இருந்து தொடங்குவோம். வெங்காயம் ஈரப்பதத்துடன் இருந்தாலோ அல்லது கரும்புள்ளிகள் இருந்தாலோ அதனை வாங்குவதைத் தவிர்க்கவும்.

முதலில் வெங்காயத்தை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. ஈரப்பதம் வெங்காயம் சீக்கிரம் கெடுவதற்கு வழிவகுக்கும்.

வெங்காயத்தை நல்ல காற்றோட்டமான இடத்தில் சூரிய ஒளிப்படாமல், உலர்ந்த இடத்தில் வைக்கவும்.

குறிப்பாக வெங்காயத்தை உருளைக்கிழங்கோடு சேர்த்து வைக்கக்கூடாது. அதனால் வெங்காயம் சீக்கிரம் கெட்டுப்போகலாம்.

வெங்காயத்தை பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல், கூடைகளில் அல்லது காற்றோட்டமுள்ள பெட்டிகளில் வைக்கவும். காற்றோட்டம் வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க அவசியமாக இருக்கிறது.

வெங்காயத்தில் ஈரப்பதம் ஏற்பட்டால் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. அதனால் தண்ணீர்ப்படாமல் உலர்ந்த இடமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அதற்காக வெயிலில் வைக்கக்கூடாது.

ஒருவேலை வெங்காயத்தை நீங்கள் நறுக்கி வைக்க விரும்பினால், நறுக்கிய வெங்காயத்தை பிளாஸ்டிக் பேக்கில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கலாம்.

வெங்காயத்தில் பூஞ்சை தென்பட்டாலோ அல்லது துர்நாற்றம் வந்தாலோ அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை வெங்காயம் கெட்டுப்போனதை உணர்த்துகிறது.

Related Posts

Leave a Comment