தேவையான பொருட்கள் :
முட்டை – 3
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
சீரகம் – 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/3 தூள்
மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் முட்டையை நன்றாக வேகவைத்து அதன் ஓட்டினை நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதனுடன் ஒரு எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்,
பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் நன்றாக பிசைந்து அதை மூடிபோட்டு ஊறவைத்து கொள்ளுங்கள்.
தற்போது வேகவைத்து எடுத்துள்ள முட்டையை நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
அதன் பச்சை வாசம் போனவுடன் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
மசாலாவின் பச்சை வாசம் போனவுடன் துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பை அணைத்து அதை ஆறவைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து நாம் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை எடுத்து உருண்டையாக உருட்டி சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்து அதை கட்டமாக கட் செய்து கொள்ளவும்.
அந்த கட்டத்தை இரண்டாக வெட்டி அதை ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.
தற்போது தேய்த்து கட் செய்து வைத்துள்ள மாவில் செய்துவைத்துள்ள முட்டை மசாலாவை உருண்டையாக உருட்டி வைத்து அதை ரோல் போல் செய்து கொள்ளவும்.
மாவை ஓட்ட பேஸ்ட் போல் கலந்துவைத்துள்ள மைதா மாவை பயன்படுத்தவும்.
அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் ரோல் பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் ரெடி செய்து வைத்துள்ள முட்டை ரோலை போட்டு நன்றாக பொரித்து கொள்ளுங்கள்.
ஒருபுறம் பொன்னிறமாக வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்தாள் சுவையான மொறு மொறு ‘முட்டை ரோல்’ ரெடி…