இன்றைய ராசி பலன் 12-02-24

by Editor News

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு இன்று அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள உறவுகள் மேலும் வலுவாக இருக்கும். உங்கள் உள்ளுணர்வு சொல்வதன்படி கேட்டு நடங்கள். உங்கள் பொருளாதார நிலையில் எதிர்பாராத வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகலாம். உங்களின் நம்பிக்கை தன்மை வேலையில் வெற்றியை உண்டாக்கும்.

ரிஷபம்:

ஆழமான பாசப்பிணைப்பு இணக்கமான உறவுக்கு வழிவகுக்கும். நட்பை மதிப்பது மற்றும் நேர்மை மற்றும் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிப்பது உங்களுக்கும், நெருக்கமானவர்களுக்குமான பிணைப்பை உறுதிப்படுத்தும். நிதி ரீதியாக இன்று ஸ்திரத்தன்மை அடைவீர்கள். முக்கிய விஷயங்களை முன்னெடுக்கும் போது அதில் நீண்ட கால பார்வை அவசியம்.

மிதுனம்:

நெருங்கிய உறவுகளுக்கு மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். நிதி ரீதியாக இன்று ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் தொழில்முறை வளர்ச்சிக்கு நேர மேலாண்மையை கடைபிடிக்கவும். நினைவாற்றல் பயிற்சிகள் அல்லது தியானம் மூலம் தெளிவு பெற முயற்சியுங்கள்.

கடகம்:

நெருங்கிய தொடர்புகளிடையே உணர்ச்சி ரீதியான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேவையான உறவுகளில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். பண விவகாரங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். உங்களிடம் மறைந்திருக்கு இயற்கையான திறமைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். தெளிவாக யோசித்து செயல்படுவது சவால்களை சமாளிக்க உதவும்.

சிம்மம்:

காதல் உறவு இன்று மேலும் வலுவாக கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். நண்பர்களிடத்தில் நம்பக தன்மையை பராமரிப்பது முக்கியம். நீங்கள் எதிர்பார்த்த நிதி ஆதாயம் இன்று சாத்தியமாகும். உங்களின் தலைமைத்துவ திறன்கள் சாதனைகளுக்கு வழி வகுக்கும். தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் உங்கள் வாழ்வை இன்று மேம்படுத்தும்.

கன்னி:

உங்களின் இயல்பான அணுகுமுறை காதல் முயற்சிகளில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.எதிர்பார்த்த பணவரவு இருக்கும், இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரும். நினைக்கும் விஷயங்களில் வெற்றி என்பது உங்களின் விடாமுயற்சியுடன் தொடர்புடையது. உங்களின் மனதை உற்சாகமாக வைக்கும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்:

காதல் விவகாரங்களில் இன்று நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாம். உங்களை சிக்கல்களில் இருந்து பாதுக்காக நண்பர்கள் உதவுவார்கள் . நிதி ரீதியாக நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

விருச்சிகம்:

உங்கள் காதல் வாழ்க்கையை வரையறுப்பதில் உணர்ச்சி மற்றும் முந்தைய அனுபவங்கள் முன்னிலை வகிக்கும். உறவில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது. நட்பில் நம்பிக்கையும் விசுவாசமும் அவசியம். நிதி சார்ந்த ஏற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுசரித்து செல்லுதல் மற்றும் மாற்றங்களை ஏற்பது ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும்.

தனுசு:

காதல் வாழ்வில் உணர்ச்சிமிக்க அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்க கூடும். இன்று பணவரவு ஒருபக்கம் இருந்தாலும் செலவுகள் ஒருபக்கம் அதிகரிக்க கூடும். நேர்மையான அணுகுமுறை எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றிக்கு வழிவகுக்கும். வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மகரம்:

உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் மனஉறுதி காதல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்று உங்களுக்கு துணை நிற்பார்கள். பணம் சார்ந்த விவகாரங்களில் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். கடின உழைப்பு மற்றும் பொறுமை நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றிக்கு உதவும்.

கும்பம்:

உங்களின் காதல் வாழ்க்கையில் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் இன்று நடக்க கூடும். உங்களின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவது உறவுகளை மேம்படுத்த உதவும். பண வரவு இயல்பாக இருக்கும் மற்றும் வணிகர்களின் தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் கூடும். தனிப்பட்ட யோசனைகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். மனநலம் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது நன்மை பயக்கும்.

மீனம்:

காதல் வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியான தொடர்புகள் இன்று அதிகமாக இருக்கும். உறவுகளை வலுப்படுத்துவதில் நட்பு, கருணை மற்றும் புரிதல் மிக முக்கியம். நிதி ரீதியிலான வளர்ச்சியும், நிலைத்தன்மையும் நீங்கள் எட்ட கூடிய தொலைவில் உள்ளன. இன்று நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சுய பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கு தேவையான விஷயங்களில் ஈடுபடுங்கள்.

Related Posts

Leave a Comment