புளி – எலுமிச்சை பழ அளவு,
தேங்காய் – அரை மூடி,
தக்காளி – 2,
சீரகம் – 1 ஸ்பூன்,
மிளகு – ஒன்றரை ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
மல்லி விதை – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – அரை ஸ்பூன்,
பூண்டு – 15 பல்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – கால் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்,
செய்முறை
தேங்காயைத் துருவி கெட்டியாக இரண்டு பால் வரை எடுத்து தனியே 600 – 750 மில்லி வரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளியையும் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, பூண்டு, ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் 2 பழுத்த தக்காளியை நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். அதில் மங்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விடுங்கள்.
அடுத்ததாக அதில் புளித்தண்ணீர், அரைத்த சீரகம் மிளகு கலவை, பெருங்காயம், பச்சை கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை நறுக்கியது, ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.. பொரிந்ததும் அதில் வெந்தயம் சேர்த்து காய்நத மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
கறிவேப்பிலை பொரிந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு,கரைத்து வைத்திருக்கும் தக்காளி, புளிக்கரைசலைச் சேர்த்து விட்டு உப்பு சரி பாருங்கள்.
அடுப்பை சிம்மில் வைத்து, வழக்கம்போல ரசத்தை நன்கு நுரைகட்டி பொங்கி வரும்வரை வைத்திருங்கள்.
நன்கு ரசம் வாசனையோடு நுரைகட்டி மேலெழும்பி வந்தம் அடுப்பை அணைத்து விட்டு ரசத்தை கீழே இறக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை தூவினால் சூப்பரான தேங்காயப்பால் ரசம் ரெடி.