உலர்ந்த திராட்சைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது. கலோரிகள் மற்றும் சர்க்கரை வடிவில் ஆற்றலையும் இவை தருகின்றன. இவை இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டவையாகவும், இவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாகவும் காணப்படுகிறது.
உலர் திராட்சைகள் ஆரோக்கியமான தின்பண்டகளாக கருதப்படுகிறது. எனினும் அவற்றை ஊறவைத்து குளிர் காலத்தில் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள், உடல் எடை குறைப்பு மற்றும் பலவற்றிற்கு உதவுவதாக சொல்லப்படுகிறது.
உலர்ந்த திராட்சைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது. கலோரிகள் மற்றும் சர்க்கரை வடிவில் ஆற்றலையும் இவை தருகின்றன. இவை இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டவையாகவும், இவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாகவும் காணப்படுகிறது. எனவே ஆரோக்கியம் கருதி இவற்றை மிதமான அளவு சாப்பிடுவது நல்லது. உண்மையில் உலர்ந்த திராட்சைகள் செரிமானத்திற்கு உதவும், இரும்பு சத்தை அதிகரிக்கும் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும்.
உலர்ந்த திராட்சைகளை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும் அவற்றை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் பொழுது அந்த பலன் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கிறது. அவ்வாறு ஊற வைத்த உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய சில பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடல் எடை குறைப்பு:
உலர்ந்த திராட்சைகளில் இயற்கை சர்க்கரைகள் காணப்படுகிறது. ஆகவே உடலின் சர்க்கரை தேவையை எந்தவித கலோரி உட்கொள்ளலும் இல்லாமல் கட்டுப்படுத்துவதற்கு இது உதவுகிறது. இதன் விளைவாக இது உங்களது எடை இழப்பு இலக்குகளை அடைவதற்கு உதவியாக அமைகிறது.
செரிமானத்திற்கு நல்லது:
உலர்ந்த திராட்சைகள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக அமைவதால் அவற்றை நீரில் ஊற வைத்த பிறகு அவை இயற்கை லாக்சேட்டிவாக நடந்து கொள்கின்றன. எனவே ஊற வைத்த உலர் திராட்சைகளை சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான செரிமான பாதைகளை பெறுவதற்கும் ஊற வைத்த உலர்ந்த திராட்சை கைக்கொடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
இழந்த திராட்சைகளில் வைட்டமின் B மற்றும் C அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டி நமது உடலை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் உலர்ந்த திராட்சைகளில் உள்ள வீக்க எதிர்ப்பு மற்றும் பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் காய்ச்சல், தொற்றுகள் மற்றும் பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
ஆற்றல் தருகிறது:
உலர்ந்த திராட்சைகளில் இயற்கை ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் உள்ளது. இதுவே அவற்றின் அதிக கலோரி அளவுகளுக்கு காரணமாக அமைகிறது. மிதமான அளவு பயன்படுத்தப்படும் பொழுது உலர்ந்த திராட்சைகள் சோர்வு மற்றும் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது.
எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது:
எலும்பு அடர்த்தி பெண்கள் சந்தித்து வரும் ஒரு மோசமான பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது. எனினும் ஊற வைத்த உலர்ந்த திராட்சைகள் இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது. கால்சியம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்த உலர் திராட்சைகளை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை அடைகின்றன.
பெரும்பாலும் குளிர் காலத்தில் நமக்கு அடிக்கடி பசி ஏற்படுவது வழக்கம். இந்த சமயத்தில் தேவையற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த இடத்தில் உலர்ந்த திராட்சைகள் உங்களுக்கு உதவக் கூடும். உணவுகளுக்கு இடையில் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவது ஆரோக்கியமான மாற்றீடாக அமைகிறது. எனினும் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடும் பொழுது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை அதிகப்படியாக சாப்பிடுவது பல்வேறு விதமான உடல் நல சிக்கல்களில் கொண்டு விடலாம்.